சொல் பொருள்
(வி.எ) 1. கடவி என்பதன் சொல்லிசை அளபெடை, செலுத்தி,
2. கடவி என்பதன் சொல்லிசை அளபெடை, செலுத்தி, அன்பு போன்றவற்றைப் பிறரிடம்காட்டி,
3. கடவி என்பதன் சொல்லிசை அளபெடை, தேடி,
சொல் பொருள் விளக்கம்
கடவி என்பதன் சொல்லிசை அளபெடை, செலுத்தி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
drive, ride, showing (love), seeking, searching for
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 440 காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி திண் தேர் வலவ கடவு என கடைஇ இன்றே வருவர் ஆன்றிகம் பனி – அகம் 74/11,12 பாகனே! திண்ணிய தேரினை இன்னும் விரைந்து செலுத்துவாயாக எனக்கூறிச் செலுத்திக்கொண்டு இன்றே நம் தலைவர் வந்துறுவர் நாம் நடுக்கத்தை அமைவேம் சேயர் என்னாது அன்பு மிக கடைஇ எய்த வந்தனவால் தாமே நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83/11-14 சேய்மைக்கண் சென்றவர் என்று எண்ணாது அன்பு மிகச் செலுத்திட தாம் நம்பால் அணுக வந்தன நெய்தலினது முகை அவிழ்ந்த ஒளி பொருந்திய மலரை ஒத்த அழகினை ஏந்திய குளிர்ந்த கண்ணினளாய நம் காதலியின் குணங்கள் புல் உளை குடுமி புதல்வன் பல்மாண் பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன் கூழும் சோறும் கடைஇ ஊழின் உள் இல் வறும் கலம் திறந்து அழ – புறம் 160/18-21 புல்லிய உளை மயிர் போலும் குடுமியையுடைய புதல்வன் பலமுறை பால் இல்லாத வற்றிப்போன முலையைச் சுவைத்தும் பால் பெறானாய் கூழும் சோறும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டு முறை முறையே உள்ளே ஒன்றுமில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து அங்கும் ஒன்றும் காணாது அழ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்