சொல் பொருள்
(வி) 1. (ஒன்றைச்)செய்துமுடி, நிறைவேற்று,
2. இறுதியை (இறப்பை) அடையச்செய்,
சொல் பொருள் விளக்கம்
(ஒன்றைச்)செய்துமுடி, நிறைவேற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
carry out, execute a plan
cause death
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து நில்லா உலகத்து நிலைமை தூக்கி செல்க என விடுக்குவன் அல்லன் – பொரு 175-177 (உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு, (ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து, ‘(நீயிர்)செல்வீராக’ என விடுவான் அல்லன், – செலவு கடைக்கூட்டுதல் போதற்கு உறுதிகொள்ளல் – பொ.வே.சோ விளக்கம் மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன் – கலி 31/6,7 மெய்யை நடுக்கும் பின்பனிக்காலப் பனியுடன், முன்பனிக்கால வாடையும் சேர்ந்து நம்மைச் செயலிழக்கச் செய்து சாகும் நிலைக்குத் தள்ள, நெஞ்சத்தைக் கலக்கும் இளவேனில் இது – கடைக்கூட்ட – இறப்பினைக் கொணர – நச்.உரை, பெ.விளக்கம் காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13 காம நோய் இறந்துபாட்டைச் சேர்த்துகையினாலே, தான் வாழ்கின்ற நாளையே வெறுத்துவிட்டவளை – நச். உரை, கடை – இறப்பு – பெ.விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்