சொல் பொருள்
கண் – கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல்.
காது – காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல்.
சொல் பொருள் விளக்கம்
கண்ணும் காதும் வைத்துப் பேசுவான் என்பதில் இக்குறிப்புண்மை அறியலாம்.
காணாததையும், கேளாததையும் கண்டது போலவும் கேட்டது போலவும் இட்டுக் கட்டிக் கூறுதல் சிலர்க்கு இயல்பு. அத்தகையரைக் ‘கண் காது வைக்காமல் உன்னால் பேச முடியாதே’ என்பர்.
கண்ணும் காதும் அருகிலிருந்தும் காதினைக் கண் பாராது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்