1. சொல் பொருள்
கயிறு திரித்தல் – புனைந்துரைத்தல்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
deceive, lying
3. சொல் பொருள் விளக்கம்
உருட்டுதல் திரித்தல் என்பவை ஒரு பொருளன. சிறிய நுண்ணிய வேறுபாடும் உண்டு. உருட்டுவார், தொடையில் உருட்டுவர். திரிப்பார் கையால் திரிப்பர். விளைவு ஒன்றாக இருப்பினும் வினையாற்றும் முறையால் சிறிது வேறுபாடு மட்டுமேயுண்டு. கயிறு திரித்தல் போல் சில செய்திகளைப் புனைந்து கூறுதல் உண்மையால் அப் பெயர் பெற்றது.
இது ஒரு வழக்குச் சொல்
பார்க்க எடுத்துவிடல், பொய் புளுகு, கயிறு உருட்டல், கதைவிடல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்