சொல் பொருள்
களமாக்கல் – இல்லாமை அல்லது வெறுமையாக்கல்
சொல் பொருள் விளக்கம்
களம், போர்க்களம். சூடடிக்கும் நெற்களம், உழவர்களது. போர் புரியும் செங்களம், வீரர்களது. பயிர் பச்சைகளை அகற்றி மேடாக்கிக் கெட்டிப் படுத்துவது நெற்களமாம். இல்லாக்கால் அதில் கதிரடிப்பு, பிணையலிடல் என்பவற்றைச் செய்வதற்கு வாய்க்காது. ஏர்க்களமாக்கல் இது. போர்க்களமாக்கினால் என்ன ஆகும்; எல்லாக் கொடுமைகளுக்கும் இடமாகும். வாழ்வாரெல்லாம் வன் சாவுக்கு இரையாவர். ஆதலால் களமாக்கல் அழிப்பு வேலையாகவே அமைந்துவிடும். தம் குடியைக் கெடுக்கும் மக்களை, ‘நீ களமாக்கி விடுவாய்’ எனப்பழிப்பது முதியவர்கள் வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்