சொல் பொருள்
(பெ) களர், உவர் நிலம்,
சொல் பொருள் விளக்கம்
களர், உவர் நிலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saline soil
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: 1.வெண்மையான புழுதி படிந்தது இந்த நிலம் வெண் புற களரி விடு நீறு ஆடி – நற் 41/2 வெண்மையான நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து 2.உவர்ப்பான இந்த நிலத்தில் ஓமை மரங்கள் நன்கு வளரும் உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/8 உப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு, 3.ஈச்சை மரங்கள் இங்கு நன்கு வளரும் கரும் களி ஈந்தின் வெண் புற களரி இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/2,3 கரிய களிபோன்ற கனியாகும் ஈத்த மரங்கள் மிகுந்த வெண்மையான புறத்தினையுடைய களர்நிலத்தில் படிந்திருக்கும் புழுதியைத் தன்மேல் தூவிக்கொண்ட கடிய நடையையுடைய ஒற்றை ஆண்யானை 4.உப்பு வணிகரான உமணர்கள் இங்கு வாழ்வர். ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி களரி புளியின் காய் பசி பெயர்ப்ப – நற் 374/2,3 உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின் களர்நிலத்துப் புளிச்சுவைகொண்டு, அவரின் வருத்தும் பசியைப் போக்க, 5.இங்கு பிளந்த முள்களைக்கொண்ட கள்ளிகள் வளரும் களரி ஓங்கிய கவை முட் கள்ளி – நற் 384/2 களர் நிலத்தில் உயரமாய் வளர்ந்த கவைத்த முள்ளுள்ள கள்ளியில் 6.இங்கு ஆவாரம் என்னும் ஆவிரைச் செடிகள் வளரும். களரி ஆவிரை கிளர் பூ கோதை – அகம் 301/14 களரி நிலத்து ஆவிரைச் செடியின் விளங்கும் பூக்களாலான மாலை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்