சொல் பொருள்
(பெ) மலைச்சரிவு,
சொல் பொருள் விளக்கம்
மலைச்சரிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mountain slope
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கவான் என்பது மலைச்சரிவு என்றாலும், மலையின் உச்சியை ஒட்டிய சரிவான பகுதியையே இது குறிக்கும். வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 3/6 விண்ணைத் தொடும் முகடுகளைக் கொண்ட பெருமை மிக்க மலைச் சரிவில் எனவே இந்த மலைச்சரிவு மலையின் உச்சியை அடுத்தது என்பது விளங்கும். இதன் உச்சியில் மேகங்கள் தவழுகின்றனவாம். மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138 மழை என்பது மேகம், சிமையம் என்பது உச்சி. வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் – நற் 53/4 நிவத்தல் என்பது உயர்ந்து நிற்றல். விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/6 விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17 விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1 விண்ணைத்தொட்டு நிற்கிறதாம் இந்தச் சரிவின் உச்சி.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்