சொல் பொருள்
காக்காக்கடி – பற்படாமல் பண்டத்தின் மேல் துணிபோட்டுக் கடித்துத் தருதல்
சொல் பொருள் விளக்கம்
குழந்தைகள் எச்சிற் பண்டம் தின்னக் கூடாது என்பதற்காகக் காக்காக்கடி கடித்து ஒருவருக்கொருவர் தருவது வழக்கம். காக்கை அலகால் கொத்தித் தருவது போலத் தருவது கொண்டு இப்பெயர் ஏற்பட்டதாகலாம். காக்காக் கடிக்கு எச்சிலும் இல்லை. தீட்டும் இல்லை என்பது வழக்கம். ‘அணில் கடித்த பழம்’ சுவையானது எனத் தின்பர். ஆனால் எலி, பேரெலி கடித்ததைத் தின்னார். அதுபோல் காக்கை கடித்தது குற்றமற்றது என்னும் கருத்திலும் இவ்வழக்கு வந்திருக்கலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்