சொல் பொருள்
காய் – காய்வகை.
கறி – கறிக்குப் பயன்படும் கிழங்கு, கீரை வகை.
சொல் பொருள் விளக்கம்
காய்கறிக் கடைகளில் இவ்விருபால் பொருள்களும் இருக்கக் காணலாம். காய் என்னப்பட்டவை நீங்கிய பிறவற்றையெல்லாம் கறிக்குப் பயன்படுவன என்னும் பொருளால் கறி என்றனர். இனிப் புலவைக் குறிக்குமோ என்பார் உளராயின் அப்பொருள் காய்கறிக் கடையில் விற்கப்படுவது இல்லை என்பதையும், அதனை விற்கும். கடை ‘ கறிக்கடை’ எனப்படுவதையும் அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்