சொல் பொருள்
(பெ) குடுமி,
சொல் பொருள் விளக்கம்
குடுமி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tuft of men’s hair
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் தண் நறும் தகரம் கமழ மண்ணி ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின் – குறி 107-112 எண்ணெய் தேய்த்து நீவிவிட்ட, சுருள்மயிர் வளர்ந்த — நல்ல கருநிறம் அமைந்த, குளிர்ந்த மணமுள்ள மயிர்ச்சாந்தை(நறுமணத்தைலம்) மணக்குமாறு பூசிமெழுகி, அந்த ஈரம் உலருமாறு விரலால் கோதிவிட்டு சிக்கு எடுத்து, வயிரம்பாய்ந்த அகிலின் அழகிய புகையை ஊட்டுதலால், யாழ் ஓசையைப் போன்று அழகு மிகுகின்ற இசைப்பாட்டினையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, அகிலின் நெய்ப்புக் கலக்கப்பெற்று (நீல)மணியின் நிறத்தைக் கொண்டுள்ள — கரிய பெரிய குடுமியின்கண்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்