சொல் பொருள்
(பெ) நாய், பன்றி, புலி,முயல்,நரி, பாம்பு போன்றவற்றின் குட்டி,
சொல் பொருள் விளக்கம்
நாய், பன்றி, புலி,முயல்,நரி, பாம்பு போன்றவற்றின் குட்டி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Young of certain animals
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊமை எண்கின் குடா அடி குருளை – மலை 501 – எண்கு என்பது கரடி குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி – நற் 195/2 வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/2 முசு என்பது ஒரு வகைக் குரங்கு சிறு வெள் அரவின் அம் வரி குருளை – குறு 119/1 அரவு என்பது பாம்பு மற புலி குருளை கோள் இடம் கரக்கும் – குறு 209/2 குருளை பன்றி கொள்ளாது கழியும் – ஐங் 397/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்