சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககால மன்னன்,
சொல் பொருள் விளக்கம்
குறும்பியன் சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் பரணர் இவனைப் பற்றிய செய்திகளைத் தருகிறார்.(அகம் 262).
இவனது படைத்தலைவன் திதியன் – https://ta.wikipedia.org/wiki/குறும்பியன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chieftain of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறம் கெழு தானை கொற்ற குறும்பியன் செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர் இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் – அகம் 262/9,10 இந்தப் பகுதிக்கு உரை எழுதிய நாட்டார், ’குரும்பியனாகிய — திதியன்’ என்பார். குறும்பியன், திதியன், அன்னிஞிமிலி செய்தியைக்காண, பார்க்க : அன்னிமிஞிலி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்