Skip to content

சொல் பொருள்

1. (வி) குவி, 

2 (பெ) 1. தொகுதி, திரள், 2. குவியல், 3. திரட்சி,

சொல் பொருள் விளக்கம்

குவி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

make a heap, collection, accumulation, heap, roundness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேனில் பாதிரி விரி மலர் குவைஇ
தொடலை தைஇய மடவரல் மகளே – ஐங் 361/2,3

வேனில் காலத்துப் பாதிரியின் விரிந்த மலர்களைக் கூட்டிக் குவித்து,
மாலையாகத் தைக்கும் கபடமற்ற பெண்ணே!

குவளை நாறும் குவை இரும் கூந்தல் – குறு 300/1

குவளை மலரின் மணம் கமழும் கொத்தான இருண்ட கூந்தல்;

தன் மலை பிறந்த தா இல் நன் பொன்
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என – புறம் 152/28,29

தன்னுடைய மலையில் பிறந்த குற்றம் அற்ற நல்ல பொன்னைப்
பல மணிக் குவியலுடனே கலந்து கொணருங்கள் என்று

குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – அகம் 113/14

திரட்சியையுடைய இமிலை உடைய காளைகளுடன் கூடிய பகைப்புலத்துப் பசுக்களைக் கவர்ந்துசெல்லும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *