சொல் பொருள்
குளிர் காய்தல்
குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் குளிர் காய்தல் என்னும் பொருளில் கூரக் காய்தல் என்னும் சொல் வழக்கு உள்ளது
சொல் பொருள் விளக்கம்
குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டாரத்தில் குளிர் காய்தல் என்னும் பொருளில் கூரக் காய்தல் என்னும் சொல் வழக்கு உள்ளது. காலங்கள் காரே, கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், வேனில் எனப் பகுக்கப்பட்டன. அவற்றுள் கூதிர் காலம் குளிர் நடுக்கக் காலமாகும். அக் கூதிர் என்பது தொகுத்துக் ‘கூர்’ என்று நின்று குளிர் பொருள் தந்தது. கூர் > கூரம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்