சொல் பொருள்
தேரின் அலங்கார உறுப்பு
சொல் பொருள் விளக்கம்
தேரில் அமர்வோருக்குக் கைப்பிடியாகப் பயன்படும் தாமரைப்பூ வடிவுள்ள
தேரின் அலங்கார உறுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Ornamental staff in the form of a lotus, fixed in front of the seat
in a chariot and held by the hand as support
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் நெடும் தேர் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும் என் கட்கே – அகம் 110/23-25 நான் செல்க என்று சொல்லவும், (போகாமல்) என்னை நோக்கியவனாய், அவன் தனது நீண்ட தேரின் கொடிஞ்சியினைப் பிடித்துக்கொண்டு நின்றான், இன்றும் என் கண் முன்னே நிற்பது போல் இருக்கிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்