1. சொல் பொருள்
ஒரு சங்ககால ஊர்
2. சொல் பொருள் விளக்கம்
கொடுங்கால் என்பது காரி வள்ளல் ஆண்ட திருக்கோவலூர் நாட்டில் பெண்ணை ஆற்றங்கரையில்
இருந்த ஓர் ஊர்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
the name of a place in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை பெண்ணை அம் பேரியாற்று ஒண் அறல் கடுக்கும் – அகம் 35/14-16 ஓயாது ஒலிக்கும் முரசை உடைய, திருக்கோவலூருக்குத் தலைவனான, நெடிய தேரைக் கொண்ட காரியின் கொடுங்கால் என்னும் இடத்தின் முன்துறையில் உள்ள பெண்ணை ஆகிய அழகிய பெரிய ஆற்றின் நுண்ணிய கருமணலைப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்