சொல் பொருள்
சுழல், சுற்று, சுற்றித்திரி
சொல் பொருள் விளக்கம்
அரசன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
whirl round, revolve, roam about
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் – பதி 17/11,12 நீர் நிரம்பக்கொண்டு திரண்டு எழும் முகில்கணம் பரவுமாறு கடுமையான காற்று சுழன்றடிக்கும் நல்ல பெரிய பரப்பினையுடைய அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும் பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் – கலி 147/36,37 எப்பொழுதும் நீங்காமல், மென்மையான என் முன்கையில் சுற்றிக்கொண்டிருக்கும் பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன் இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் குறவரும் மருளும் குன்றத்து படினே – மலை 274,275 முறிந்துபோகாத கெட்டியான வில்லையுடையவர்களாய் விலங்குகளைத் தேடிச் சுற்றியலையும் குறவர்களும் (வழி தவறி)மனம்தடுமாறும் குன்றுகளில் சென்றால்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்