சொல் பொருள்
கொள்ளைப்பொருள், ஈட்டிய பொருள், உணவு, பரத்தை, சிறைப்பிடிக்கப்பட்ட மகளிர், கொள்ளையிடுதல், திறைப்பொருள், கப்பம்
சொல் பொருள் விளக்கம்
கொள்ளைப்பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
plunder, pillage, earned possession, food, prostitute, captive women, Plundering (a town) after capture, tribute
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொண்டி உண்டி தொண்டையோர் மருக – பெரும் 454 பகைப்புலத்துக் கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோருடைய குடியில் வந்தவனே! தொல் கொண்டி துவன்று இருக்கை – பட் 212 தொன்றுதொட்டு ஈட்டிய பொருளினையுடைய நிறைந்த குடியிருப்பினையும் கள் கொண்டி குடி பாக்கத்து – மது 137 கள்ளாகிய உணவினையுடைய குடிகளையுடைய சீறூர்களையுமுடைய நெஞ்சு நடுக்கு_உறூஉ கொண்டி மகளிர் – மது 583 தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்தி அவரின் பொருளைக் கொள்ளையிடும் பொதுமகளிர் கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 246,247 பிறர் நாட்டிலிருந்து கொள்ளையிட்டுக் கொணர்ந்த மகளிர் பலரும் நீர் உண்ணும்துறையில் மூழ்கி அந்திக் காலத்தில் ஏற்றிய அவியாத விளக்கினையுடைய கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக – பதி 43/25 பகைப்புலத்தைக் கொள்ளையாடும் மள்ளர்கள், கொல்லுகின்ற களிறுகளைப் பெற்றுக்கொள்க போர் எதிர்ந்து கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என கொடுத்த மன்னர் நடுக்கற்றனரே – புறம் 51/5-7 போரினை ஏற்று திறையை வேண்டுவனாயின் கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கம் தீர்ந்தார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்