சொல் பொருள்
குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர்
சொல் பொருள் விளக்கம்
குமரி மாவட்டத்தில் மேல்காற்றைக் கொந்தல் என வழங்குகின்றனர். கொண்டல் என்பது நீர்கொண்டுவரும் கீழ்காற்றைக் குறிப்பது பொதுவழக்கு. இது மாவட்ட வழக்காக உள்ளது. “ஆனி ஆடிமாதக் கொந்தலிலே, குளிர் ஆடுகள்போல் கொடுகி நிற்போம்” என்பது நாஞ்சில் கவிமணி பாடல் அடி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்