சொல் பொருள்
கொந்துதல் – பறவை தன் அலகால் ஒன்றைக் குத்திக் கிழித்தல் கொந்துதலாம்.
குதறுதல் – கிழித்ததைக் குடைந்து அலகால் எடுத்து உதறுதல் குதறுதலாம்.
சொல் பொருள் விளக்கம்
கொத்தி அல்லது குத்திக் குதறுதல் என்பதும் இது. பறவை. இறந்து போன ஒன்றைக் கொந்திக் குதறுதலும் அதனைத் தின்னுதலும் காணக் கூடியது. பறவை எனினும், காகம், கழுகு, பருந்து என்பவை குறிப்பிடத் தக்கவையாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்