சொல் பொருள்
(பெ) சந்தனம்
சந்தம் அழகு என்னும் பொருளில் கல்குளம் வட்டாரத்தில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
சந்தம் என்பது இசை. சந்தப்பாடல் ஒருவகை. இங்கே சொல்லப் படும் சந்தம் அழகு என்னும் பொருளில் கல்குளம் வட்டாரத்தில் வழங்குகின்றது. தளிரின் நிறமும் மென்மையும் கவர்ச்சிமிக்கவை. மாநிறம் என்பது மாந்தளிர் நிறமாகும். “பல்லவத்தின் (தளிரின்) சந்தம் (அழகு) மடிய (அழிய) வடிவால் மருட்டிய தாழ்குழலே” என்பது யாப்பருங்கலக் காரிகையில் கடவுள் வாழ்த்துப் பாட்டு அரிய இலக்கிய ஆட்சியும், எளிமையாக மக்களாட்சியில் இடம் பெறும் என்பதன் சான்றுகளுள் ஒன்று சந்தம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sandal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் – பதி 87/2,3 சந்தனம், அகில் ஆகியவற்றின் கட்டைகளோடு பொங்குகின்ற நுரையையும் சுமந்துகொண்டு, தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், நுரையால் வெண்மையான தலையைக் கொண்ட சிவந்த புதுவெள்ளம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்