சொல் பொருள்
(பெ) கங்கை நீரைத் தரித்தவன், சிவன்
சொல் பொருள் விளக்கம்
கங்கை நீரைத் தரித்தவன், சிவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
siva, as having the Ganges in his locks
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப தணிவு_உற தாங்கிய தனி நிலை சலதாரி மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/4-7 தீயைப் போன்று மலர்ந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் விழச்செய்த பெரு வெள்ளத்தைத் தன் விரித்த சடையினில் பாரமாக, மலர்ந்து விழும் புதிய மலரைத் தாங்குவது போன்று, விழுகின்ற வேகம் தணியும்படியாகத் தாங்கிய ஒப்பற்ற நிலையையுடைய சலதாரி என்னும் பெயர்கொண்ட நீல நிறக் கழுத்தினையுடைய சிவபெருமானுக்கு, மதிப்பு வாய்ந்த கார்த்திகை மகளிரிடத்தில் பிறந்தவனே! நீ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்