சொல் பொருள்
சாப்பாடு – பலர் கூடிச் சாப்பிடுதல் சாப்பாடு.
கூப்பாடு – பலர் கூடிச் சாப்பிடும் போது உண்டாகும் பேரொலி கூப்பாடு.
சொல் பொருள் விளக்கம்
சப்பு, சப்பிடுதல் என்பவை சாப்பாட்டுக்கு மூலம். கூ, கூவுதல், கூப்பிடு, கூப்பாடு என்பவை கூப்பாட்டின் மூலம்.
பலர் சேர்ந்து சாப்பிடும் போது, “இதைக் கொண்டு வா, அதைக் கொண்டு வா” என்று கூப்பிடுவதும், பலரும் ஒரு வேளையில் கூப்பிடுதல் உரையாடுதல் இரைதல் முதலியவை நிகழ்த்துவதும் ‘கூப்பாடு’ ஆக்குகின்றதாம். சிலர் சாப்பாடு போடும் போதே திட்டவும் செய்வர். அதனால் “ சாப்பாடும் வேண்டாம் கூப்பாடும் வேண்டாம்” என்று வெறுத்துக் கூறும் நிலையும் உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்