Skip to content

சொல் பொருள்

(பெ) மலையின் சரிவான பகுதி,

சொல் பொருள் விளக்கம்

மலையின் சரிவான பகுதி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

slope of a hill.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இங்கே அருவிகள் பாய்ந்து வீழும்.

பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90

மூங்கில்கள் நெருங்கி வளர்ந்திருக்கும்.

கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க – மது 242

குறிஞ்சிப்பூக்கள் கூட்டமாய் வளரும்

சாரல் கரும் கோல் குறிஞ்சி – குறு 3/2,3 

பலாப்பழங்கள் பழுத்துத்தொங்கும்.

சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் – ஐங் 214/1

இதனைச் சீர்ப்படுத்திக் குறவர் தினை விதைத்து வளர்ப்பர்.

தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291

ஆங்காங்கே குடிசைகள் அமைத்து வாழ்வர்

சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *