சிறை என்பது சிறகு, தடுப்பு, அணை
1. சொல் பொருள்
(வி) சிறைப்பட்டிரு, மூடியிரு
(பெ) 1. சிறகு, 2. வரப்பு, 3. பிணிப்பு, 4. அடக்குதல், கைதிகளை அடைத்துவைக்கும் அறை, 5. பக்கம், ஓரம், 6. அணை, தடுப்பு, 7. இரண்டு பக்கங்களிலும் வீடுகளைக் கொண்ட தெருவின் ஒரு பக்கம், 8. சிறைச்சாலை, 9 காவல்
சிறை – அழகு
2. சொல் பொருள் விளக்கம்
இச் சிறை என்பது சிறைச்சாலைப் பொருளது அன்று சிறுமைப்படுத்தி அடக்கி வைப்பது எல்லாம் சிறையெனப்படும். அவ்வகையில் பழங்கால அரண்மனைகளின் உட்பகுதியாம் அந்தப்புரம் சிறையெனப்பட்டது. வேற்று நாட்டு மகளிரைப் பற்றிக் கொண்டு வந்தும் சிறைப்படுத்தினர். அவர்கள் தங்கல் ‘வேளம்’ எனப்பட்டது. வேளகம் (விருப்பம்மிக்க இடம்) என்பதே ‘வேளம்’ ஆயிற்றாம். அந்தப்புரம், வேளகம் ஆகியவற்றில் இருந்த மகளிர் அழகுமிக்கவராக இருந்தமையால் அழகிய பெண்களைச் ‘சிறை,’ என்னும் வழக்காயிற்று. “அவள் பெரிய சிறை; அவளைத்தேடி ஆளுக்கு ஆள் போட்டி போடுவார்கள்” என்பதில் சிறை ‘அழகிய பெண்’ எனப்பொருள் தருதல் அறியலாம். அழகைத் தன்னகத்துச் சிறைப்படுத்திக் கொண்டவள் சிறையெனப்பட்டாள் என்பதுமாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
confine, restrain, wing, boundary, holding, restraint, side, edge, dam, block, one side of a street, prison, watch
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
மூடியிருக்கின்ற, ஈங்கை மரத்தின் தேன்துளி மிகவும் திரண்டுள்ள அன்றைய மலர்கள்
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும்
சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246
செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
அள்ளல்
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/8,9
சேறு நிரம்பிய
கழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை
நிறைய பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற் 74/3,4
நிறைய ஏற்றப்பட்ட தோணியை, தாற்றுக்கோல் வைத்திருப்பவர்கள்
அடக்குதற்கு அரிய களிற்றினை பிணித்துச் செலுத்துவதைப் போல, பரதவர்கள் செலுத்தும்
யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/8,9
யாருமில்லாமல் ஒரு ஓரத்தில் கிடந்து
பெரிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவளை வருத்தவேண்டாம்.
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன – நற் 369/9,10
கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையைக் கடந்து இறங்கிவரும்
அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல
மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/5
ஊர்ப்பொதுவிடத்துக்குப் போய் தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் – அகம் 122/5
பிணித்தலைக் கொண்ட அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினும்
வீங்கு சிறை வியல் அருப்பம் – புறம் 17/28
மிகுந்த காவலையுடைய அகன்ற அரணினையும்
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை/புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 150,151
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி – பொரு 90
சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246
மென் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர் – மது 574
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை/இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து – நற் 54/2,3
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/9
வெண் கோட்டு அரும் சிறை தாஅய் கரைய – நற் 67/4
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற் 74/4
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை/புதுவது புணர்ந்த பொழிலே உதுவே – நற் 96/2,3
விரி பூ கானல் ஒரு சிறை நின்றோய் – நற் 155/3
யாரும் இல் ஒரு சிறை இருந்து – நற் 193/8
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை/குன்ற வெற்பனொடு நாம் விளையாட – நற் 194/7,8
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை/புள் அடி பொறித்த வரி உடை தலைய – நற் 241/1,2
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை/கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு – நற் 272/3,4
சிறை குவிந்து இருந்த பைதல் வெண்குருகு – நற் 312/3
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த – நற் 354/3
நடுங்கு சிறைபிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து – நற் 367/2
சிறை அடு கடும் புனல் அன்ன என் – நற் 369/10
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி – குறு 2/1
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை/புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள் – குறு 81/3,4
சிறை பனி உடைந்த சே அரி மழை கண் – குறு 86/1
அளிய தாமே கொடும் சிறை பறவை – குறு 92/2
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை/கரும் கோட்டு புன்னை பூ பொழில் புலம்ப – குறு 123/2,3
வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை/தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு – குறு 149/3,4
தாஅல் அம் சிறை நொ பறை வாவல் – குறு 172/1
நீல மென் சிறை வள் உகிர் பறவை – குறு 201/3
நறும் தாது ஊதும் குறும் சிறை தும்பி – குறு 239/4
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை – குறு 296/2
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை/நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ – குறு 350/4,5
அம்ம வாழியோ மணி சிறை தும்பி – குறு 392/1
அறு சில் கால அம் சிறை தும்பி – ஐங் 20/1
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி – ஐங் 53/2
தடுப்புகளை உடைத்துக்கொண்டு புதிய நீர்ப்பெருக்கு பாய்வதால் கலங்கிப்போய்
சிறை அழி புது புனல் ஆடுகம் – ஐங் 78/3
அணையை அழிக்கின்ற புதிய நீர்ப்பெருக்கில் விளையாடலாம்,
அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன் – ஐங் 300/2
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப – ஐங் 370/2
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை/குறும் கால் மகன்றில் அன்ன – ஐங் 381/3,4
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப – ஐங் 447/3 அம் சிறை வண்டின் அரிஇனம் மொய்ப்ப – ஐங் 489/1
மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/5
மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும் – பதி 29/9
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம் – பதி 30/19
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்கு – பதி 43/26
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் – பதி 62/18
குழூஉ சிறை எருவை குருதி ஆர – பதி 67/9
பாம்பு சிறை தலையன – பரி 4/46
வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/22
திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் – பரி 6/23
திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் – பரி 6/23
உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று – பரி 6/24
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் – பரி 11/84
பாறை பரப்பில் பரந்த சிறை நின்று – பரி 12/83
படர் சிறை பல் நிற பாப்பு பகையை – பரி 13/39
புகும் அளவுஅளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை – பரி 24/67
மாஅல் அம் சிறை மணி நிற தும்பி – கலி 46/2
ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி – கலி 75/5
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ – கலி 98/17
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட – கலி 118/11
அணி சிறை இன குருகு ஒலிக்கும்-கால் நின் திண் தேர் – கலி 126/6
கரை சேர் புள்இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/2
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ – அகம் 9/18
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் – அகம் 41/13
எருவை சேவல் கரிபு சிறை தீய – அகம் 51/6
சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும் – அகம் 76/11
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை/வளை வாய் பருந்தின் வான் கண் பேடை – அகம் 79/11,12
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை/மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர் – அகம் 82/13,14
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து – அகம் 88/11
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை/உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் – அகம் 92/10,11
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் – அகம் 103/9
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் – அகம் 122/5
கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை – அகம் 132/10
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/11
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக – அகம் 162/9
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில – அகம் 190/13
வளை சிறை வாரணம் கிளையொடு கவர – அகம் 192/7
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி – அகம் 200/9
கணம்_கொள் வண்டின் அம் சிறை தொழுதி – அகம் 204/6
உப்பு சிறை நில்லா வெள்ளம் போல – அகம் 208/19
உப்பால் ஆன அணையைக் கரைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தைப் போல
அம் சிறை வண்டின் மென் பறை தொழுதி – அகம் 234/12
சேய் உயர் சினைய மா சிறை பறவை – அகம் 244/2
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர் – அகம் 291/10
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும் – அகம் 295/7
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும் – அகம் 297/17
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை/எழுதி அன்ன திண் நிலை கதவம் – அகம் 311/2,3
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – அகம் 320/9
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப – அகம் 334/10
வருத்தி கொண்ட வல் வாய் கொடும் சிறை/மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய – அகம் 346/9,10
வருந்திச் செய்த வலிய தலையையுடைய வளைவான அணையின் மேலே வழிந்து விரைந்து விழுகின்ற நீரைப் பார்த்து மிகவும் மெதுவாகச் சென்று
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை/குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை – அகம் 367/7,8
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை – அகம் 377/11
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை/எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி – அகம் 381/9,10
திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும் – புறம் 3/22
வீங்கு சிறை வியல் அருப்பம் – புறம் 17/28
அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை/கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ – புறம் 43/4,5
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் – புறம் 44/15
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் – புறம் 147/4
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி – புறம் 225/12
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி – புறம் 240/9
கொடும் சிறை குரூஉ பருந்து ஆர்ப்ப – புறம் 269/11
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும் – புறம் 294/7
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த – புறம் 307/8
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக – புறம் 375/3
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே – புறம் 399/18
போக்கி சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு – பரி 7/56
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ – புறம் 169/5
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே – புறம் 263/8
கரையை அரிக்கும் நீரில் அணை போல் தடுத்தவனின் நடுகல்லை-(தொழாமல் செல்வதைத் தவிர்ப்பாய்)
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் – புறம் 51/1
வெள்ளம் பெருகுமானால் அதனைத் தடுக்கும் அணை இல்லை
சிறையும் தானே தன் இறை விழுமுறினே – புறம் 314/7
அணைபோலத் தடுத்து நிறுத்துபவனும் அவனே – தனது அரசனுக்குத் துன்பம் வந்தால்,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த – புறம் 326/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்