சொல் பொருள்
(வி) 1. கூர்மையாகச் சீவு, 2. பெருக்கித்தள்ளு, 3. அகற்று, விலக்கு, 4. செம்மைசெய்
சொல் பொருள் விளக்கம்
1. கூர்மையாகச் சீவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sharpen, sweep off, remove, expel, correct
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு – கலி 101/8,9 பிறரால் சீறுவதற்கு முடியாத வலிமையுடையோனாகிய இறைவனின் குந்தாலியைப் போல் கொம்புகள் சீவப்பட்ட ஏறுகளை அவற்றின் தொழுவினுள் (வாடிவாசலுக்கு உள்ளே) ஒரு சேர அடைத்தனர் ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1 கடலில் தோன்றி, இந்த உலகத்து இருளைக் கூட்டித்தள்ளும் ஞாயிற்றைப் போல், செது மொழி சீத்த செவி செறு ஆக – கலி 68/3 பொல்லாத சொற்கள் இடையில் புகாமல் விலக்கிய தம் செவிகளே விளைநிலமாக இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/19,20 கருமையான கழியின் வழியாக வந்து இறங்கும் கடலில் செல்லும் ஓடங்களை தெளிந்த நீர் பரந்த ஆற்றைச் செம்மைசெய்து செலுத்தி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்