சேடல் என்பது பவள மல்லிகை
1. சொல் பொருள்
(பெ) பவள மல்லிகை, பவழமல்லி, பாரிஜாதம் என்னும் மரம்
2. சொல் பொருள் விளக்கம்
இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலர். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.
சேடல் என்னும் சொல்லில் செந்நிறத்தைக் குறிக்கும் வேர்ச்சொல் உள்ளது. பவள நிறம் என்பது செந்நிறம். பவளமல்லிப் பூவின் புறவிதழில் ஒட்டிக்கொண்டிருக்கும் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும்.
இதன் பூ முன்னிரவில், அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் பூப்பதால் வடமொழியில் பிரம்மதர்ஷன் புஷ்பம் என்று அழைக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
English: Coral jasmine, lady of the night, night jasmine, tree of sadness অসমীয়া: শেৱালি ফুল अवधी: हरसिंगार भोजपुरी: हरसिंगार भोजपुरी: हरसिंगार বাংলা: শিউলি ফুল Deutsch: Nacht-Jasmin, Trauerbaum فارسی: یاسمن شبگل suomi: Neidonjasmiini गोंयची कोंकणी / Gõychi Konknni: स्वर्गिय फुल –पारिजत ગુજરાતી: પારિજાત हिन्दी: प्राजक्ता Bahasa Indonesia: Srigading 日本語: パーリジャータ ಕನ್ನಡ: ಪಾರಿಜಾತ മലയാളം: പവിഴമല്ലി ဘာသာ မန်: တဝ်သွဝ်၊ တၞံ मराठी: पारिजातक မြန်မာဘာသာ: ဆိပ်ဖလူး नेपाली: पारिजात फूल ଓଡ଼ିଆ: ଗଙ୍ଗଶିଉଳୀ ਪੰਜਾਬੀ: ਹਾਰ ਸਿੰਗਾਰ سنڌي: ھار سينگار svenska: Sorgjasmin தமிழ்: பவழமல்லி ತುಳು: ಪಾರಿಜಾತ తెలుగు: పారిజాతం ไทย: กรรณิการ์ 中文: 夜花
3. ஆங்கிலம்
Night-flowering jasmine, Nyctanthes arbor-tristis, Linn.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
சேடல் செம்மல் சிறுசெங்குரலி – குறி 82 சேடல் நெய்தல் பூளை மருதம் கூட முடித்த சென்னியன் நீடு ஒளி - மது: 22/69,70 மதுரையைக் காவல் புரிந்துவந்த நாற்பெரும் பூதங்களில் ஒன்று சேடல் மலரை அணிந்திருந்தது சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - மது:13/153 வைகையாற்றுப் படுகையில் இது பூத்துக் கிடந்தது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்