Skip to content

இணைச் சொல்

இணைச் சொல்லைப் பிரித்துத் தனித்துப் பார்ப்பினும் அச்சொல்லுக்குப் பொருள் உண்டு. இனணச் சொல் என்பது தனிச்சொல்லாக நிற்பினும் நிற்கவும், இணைச்சொல்லாக நிற்பினும் நிற்கவும் இயைந்ததன்மையதாம்

கத்தை கசடு

சொல் பொருள் கத்தை (கற்றை) – தொகுதியாக அமைந்த அழுக்குப் பொருள்.கசடு – கலத்தில் அல்லது தளத்தில் அமைந்த வழுக்குப் பொருள். சொல் பொருள் விளக்கம் கற்றை என்பது தொகுதி என்னும் பொருளது. குப்பைக்… Read More »கத்தை கசடு

கத்தி கப்படா

சொல் பொருள் கத்தி – குத்துதல் கிழித்தல் அறுத்தற்குப் பயன்படுத்தும் கருவி.கப்படா – கத்திப்பட்டா எனப்படும் பட்டையானதும் நீண்டதுமாய்க் கத்தி போல் பயன்படுத்துதற்காம் பெரிய கருவி. சொல் பொருள் விளக்கம் ‘கத்தி கப்படாவுடன் வந்தான்;… Read More »கத்தி கப்படா

கத்தல் கதக்கல்

சொல் பொருள் கத்தல் – மகிழ்வுக் குறியாகக் கழுதை கனைத்தல்.கதக்கல் – துயர்க் குறியாகக் கழுதை வாடுதல். சொல் பொருள் விளக்கம் கழுதை கனாக் கண்டதாம் ‘கத்தலும் கதக்கலும்’ என்பது பழமொழி. தாமே ஒன்றை,… Read More »கத்தல் கதக்கல்

கண்ணும் மண்ணும்

சொல் பொருள் ‘கண்ணும் மண்ணும் என்பது முத்தெடுப்பார் அல்லது முத்துக் குளிப்பார் வழக்கில் ஊன்றியுள்ள தொடராகும். சிறுவர் விளையாட்டில் மகிழ்வுப் பெருக்கோ, தோல்விக் கிறுக்கோ வந்துவிட்டால் மண்ணையள்ளி மாறி மாறி வீசுதல் உண்டு. அப்பொழுதில்… Read More »கண்ணும் மண்ணும்

கண்ணீரும் கம்பலையும்

கண்ணீரும் கம்பலையும்

கண்ணீரும் கம்பலையும் என்பதன் பொருள் அழுது அரற்றுதல். 1. சொல் பொருள் கண்ணீர் – அழுகை.கம்பலை – அரற்றுதல். மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் Grief crying spells 3. சொல் பொருள் விளக்கம் அழுது… Read More »கண்ணீரும் கம்பலையும்

கண்டது கழியது

சொல் பொருள் கண்டது – கண்ணில் கண்ட பொருள்களும் கையிற்குக் கிடைத்த பொருள்களுமாம்.கழியது – உடலுக்கு ஒவ்வாத பொருள்களும் பதனழிந்து போன பொருள்களுமாம். சொல் பொருள் விளக்கம் கண்டதைக் கழியதைக் குழந்தைகள் மட்டும் தின்பதில்லை.… Read More »கண்டது கழியது

கண்ட துண்டம்

சொல் பொருள் கண்டம் – கண்டிக்கப் பெற்றது கண்டம்.துண்டம் – கண்டத்தைத் துண்டிக்கப் பெற்றது துண்டாம். சொல் பொருள் விளக்கம் கண்டம் பெரியது; துண்டம் கண்டத்தில் சிறியது என்க. கண்ட கோடரி என்பது கோடரியுள்… Read More »கண்ட துண்டம்

கண் காது

சொல் பொருள் கண் – கண்ணால் கண்டது போல ஒன்றைக் கூறுதல்.காது – காதால் கேட்டது போல ஒன்றைக் கூறுதல். சொல் பொருள் விளக்கம் கண்ணும் காதும் வைத்துப் பேசுவான் என்பதில் இக்குறிப்புண்மை அறியலாம்.… Read More »கண் காது

கடை கண்ணி

சொல் பொருள் கடை – தனித்தனியாய் அமைந்த வணிக நிலையம்.கண்ணி – தொடராக அமைந்த கடை வீதியும் சந்தையும். சொல் பொருள் விளக்கம் கடை – இடம் என்னும் பொருள் தரும் இச்சொல் வாயில்… Read More »கடை கண்ணி

கடுவாய் புலி

சொல் பொருள் கடுவாய் – கொடுமையான வாயையுடைய பெரும்புலி.புலி – உடலில் வரியும் புள்ளியும் உடைய சிறுபுலி. சொல் பொருள் விளக்கம் ‘வாயைப் பிளக்குதடி- கையுறை, வாளும் உருவுதடி’ என்பார் கவிமணி. இது கடுவாய்ப்… Read More »கடுவாய் புலி