Skip to content

உ வரிசைச் சொற்கள்

உ வரிசைச் சொற்கள், உ வரிசைத் தமிழ்ச் சொற்கள், உ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், உ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

உணர்வு

சொல் பொருள் அறிவுடைமை உலகியலால் செய்யத் தகுவது அறிதல் சொல் பொருள் விளக்கம் உணர்வு என்பது அறிவுடைமை. அஃதாவது உலகியலால் செய்யத் தகுவது அறிதல்.(தொல். பொருள். 273. பேரா.)

உண்மை

சொல் பொருள் உண்மையாவது விகாரமின்றி இயல்பாய் நிற்றல். சொல் பொருள் விளக்கம் உண்மையாவது விகாரமின்றி இயல்பாய் நிற்றல். (தொல். எழுத்து. 256. சி. கணேச.)

உண்டை

சொல் பொருள் உருண்டை திரள் வடிவினை உணர்த்தல் சொல் பொருள் விளக்கம் ‘உண்டை’ திரள் வடிவினை உணர்த்தல் திவாகரத்துள் காண்க. உருள் என்னும் முதனிலையிற்றோன்றிய ‘உருண்டை’ என்னுஞ் சொல் இடைக்குறைந்து ‘உண்டை’ என்றாயிற்று. (திருவாசக… Read More »உண்டை

உடைமை

சொல் பொருள் உடைமை சார்பொருளும் புறப்பொருளுமே சுட்டின. சொல் பொருள் விளக்கம் உடைமை என்ற சொல் தமிழில் உடை என்பதினின்றும், அவ் உடை என்பதும் உடு என்பதினின்றும் பிறந்துள்ளதனைக் காணலாம். உடை என்பது உடலுக்குப்… Read More »உடைமை

உடை

உடை

உடை என்பது ஒரு வகை முள் புதர் மரம். 1. சொல் பொருள் (பெ) குடைவேல்மரம், குடைவேலம், குடை மரம்; உடம்பைச் சூழ்ந்திருக்கும் உடை எனப்படுவது புறப்பற்றுக்களின் துவக்கம் 2. சொல் பொருள் விளக்கம் இது… Read More »உடை

உடன் கூட்டம்

சொல் பொருள் அதிகாரிகள் சொல் பொருள் விளக்கம் அரசன், தான் விரும்பியவாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவன் எனினும் பல அதிகாரிகள் உடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம் இவ்வதிகாரிகளை “உடன் கூட்டத்ததிகாரிகள்” என்று கல்வெட்டுக்களும், செப்பேடுகளும்… Read More »உடன் கூட்டம்

உட்பகை

சொல் பொருள் அஃதாவது புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந்துணையும் உள்ளாய் நிற்கும் பகை. சொல் பொருள் விளக்கம் அஃதாவது புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந்துணையும் உள்ளாய் நிற்கும் பகை.(திருக். உட்பகை. பரி.)

உட்கொள்ளும் வகைகள்

அசைத்தல் – விலங்குபோல் அசையிட்டுத் தின்னுதல்; அதுக்குதல் – சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி ஒதுக்குதல்; அரித்தல் – பூச்சி புழுப் போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்; அருந்ததுதல் – சிறிது சிறிதாய்த்… Read More »உட்கொள்ளும் வகைகள்

உழலுதல்

சொல் பொருள் குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும். சொல் பொருள் விளக்கம் ‘அலமரல்’ ‘தெருமரல்’ ‘உழலுதல்’ என்னுஞ்சொற்கள், குற்றவாளிகளைச் சக்கரத்திலிட்டுச் சுழற்றிக் கொன்றமையைத் தெரிவிக்கும்.(சொல். கட். 25.)