Skip to content

கொ வரிசைச் சொற்கள்

கொ வரிசைச் சொற்கள், கொ வரிசைத் தமிழ்ச் சொற்கள், கொ என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கொ என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கொடுக்கன்

சொல் பொருள் கொடுக்கு உடைய தேளைக் கொடுக்கன் என்பது குமரி மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் கொடுக்கு என்பது வளைவுப் பொருளது. தேளின் கடிவாய் கொடுக்கு எனப்படும். தேளுக்கு வாய்த்த விடம் கொடுக்கில்… Read More »கொடுக்கன்

கொடி

சொல் பொருள் கொடி என்பது சங்கிலி என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் படர்கொடியை அல்லாமல் செய்பொருள்கள் சில கொடி என வழங்கப்படுகின்றன. ஊர்வனவாம் பாம்பு கொடி என… Read More »கொடி

கொட்டாய்

1. சொல் பொருள் காடுகளில் கூரை, கீற்று வேய்ந்த வீடுகளைக் கொங்குப் பகுதியில் காணலாம். மற்றை மாவட்டங்களில் கொட்டகை எனப்படும் குடிசை வீடுகள், கொங்கு நாட்டில் கொட்டாய் என வழங்குகின்றது 2. சொல் பொருள்… Read More »கொட்டாய்

கொட்டடித்தல்

சொல் பொருள் ஒரு செய்தியை அறிந்தால் அதனை உடனே ஊரெல்லாம் பரப்புவார் உளர். அதனை, கொட்டடித்தல் என்பது நெல்லை வழக்காகும். சொல் பொருள் விளக்கம் ஒரு செய்தியை அறிந்தால் அதனை உடனே ஊரெல்லாம் பரப்புவார்… Read More »கொட்டடித்தல்

கொசுக்கை

சொல் பொருள் கொசுக்கை என்பது சிறிது என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் கொசு ஒரு சிற்றுயிரி. அதனால் மெலியவை, சிறியவை, எளியவை என்பவற்றைக் கொசுவுக்கு ஒப்பிடல் உண்டு.… Read More »கொசுக்கை

கொச்சிக்காய்

சொல் பொருள் கொச்சிக்காய் என்பது மிளகாயைக் குறிக்கும் வட்டார வழக்காகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் நாம் வழங்கும் மிளகாய் வருமுன், அச்சுவை தருவதாக இருந்தது மிளகு. அது மும்மருந்துள் ஒன்றாகச்… Read More »கொச்சிக்காய்

கொச்சி

சொல் பொருள் குழந்தை என்னும் பொருளில் முஞ்சிறை வட்டாரத்தில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் கொச்சி என்னும் ஊரைக் குறிப்பது பொதுவழக்கு. குழந்தை என்னும் பொருளில் முஞ்சிறை வட்டாரத்தில் வழங்குகின்றது. ஊரின் பெயரிலுள்ளபற்றால் –… Read More »கொச்சி

கொங்கை

சொல் பொருள் மேல் மட்டையைத் தாங்கி நிற்கும் பனையின் அடி மட்டையைக் குரங்குமட்டை என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் கொங்கை என்பது மார்பகத்தைக் குறித்தல் பொது வழக்கு. மரத்தில் இருந்து… Read More »கொங்கை

கொக்கு முக்காடு

சொல் பொருள் கூனிக் குறுகி மூடிக் கிடத்தல் என்னும் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. வாட்டம், வாட்டமாக இருத்தல் என்னும் பொருளது அது. சொல் பொருள் விளக்கம் முக்காடு, முடக்கம் என்பவையெல்லாம் சோர்ந்து கிடத்தல்… Read More »கொக்கு முக்காடு

கொக்கி

சொல் பொருள் நெடுவிளை வட்டாரத்தில் கொக்கி என்பது தொரட்டியைக் குறிக்கிறது சொல் பொருள் விளக்கம் கழுத்துச் சங்கிலி, திறவுகோல் (சாவிக்) கொத்து ஆயவற்றுக்கு உள்ள கொக்கி பொது வழக்கு. நெடுவிளை வட்டாரத்தில் கொக்கி என்பது… Read More »கொக்கி