Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

கால்கட்டை போடுதல்

சொல் பொருள் கால்கட்டை போடுதல் – திருமணம் செய்வித்தல் சொல் பொருள் விளக்கம் பள்ளிக்கு வராமல் தப்பியோடும் மாணவர்களுக்கு முன்பு கட்டைபோடும் வழக்கம் இருந்தது. குட்டை போடும் வழக்கமும் இருந்தது. கட்டை என்பது ஒரு… Read More »கால்கட்டை போடுதல்

காயா? – பழமா?

சொல் பொருள் காயா? – பழமா? தோல்வியா? வெற்றியா? சொல் பொருள் விளக்கம் காய் முதிரா நிலை; பழம் முதிர்நிலை; ஒரு செயல் நிறைவேறலைப் பழுத்தல் என்பது குறித்தது. “தானே பழுக்காததைக் தடிகொண்டு பழுக்கவைத்தது… Read More »காயா? – பழமா?

காய்தல்

சொல் பொருள் காய்தல் – பட்டுணியாதல். பசித்துக் கிடத்தல் சொல் பொருள் விளக்கம் வெயில் காய்தல்; குளிர்காய்தல்; காயப் போடுதல் என்பவை எல்லாம் வெதுப்புதல் பொருளன. இக் காய்தல், கதிரோன், தீ, மின்சாரம் ஆகியவற்றால்… Read More »காய்தல்

காது கொடுத்தல்

சொல் பொருள் காது கொடுத்தல் – கேட்டல் சொல் பொருள் விளக்கம் காது உறுப்புப் பொருள். முதலொடு கழற்றக்கூடாத உறவு(தற்கிழமை)ப் பொருள். கொடுத்தல் என்பது கொடுக்கும் உறவு (பிறிதின் கிழமை)ப் பொருள் – கொடாப்… Read More »காது கொடுத்தல்

காதுகுத்தல்

சொல் பொருள் காதுகுத்தல் – ஏமாற்றல் சொல் பொருள் விளக்கம் ‘காது குத்துதல்’ பெருவிழாவாக இந்நாளிலும் நிகழ்கின்றது. இது பழமையான வழக்கம். காது குத்துதல் படிப்பறிவில்லார் செயல் எனப் படித்தவர்கள் எண்ணிய நிலையில் “என்ன… Read More »காதுகுத்தல்

காதில் பூச்சுற்றல்

சொல் பொருள் காதில் பூச்சுற்றல் – அறிவறியாமை சொல் பொருள் விளக்கம் மிகப்பழ நாள் வழக்கு காதில் பூச்சுற்றல். தலையில் பூச் சூடல் இன்னும் காணக்கூடிய பெருவழக்கு. கழுத்துச் சங்கிலியிலோ கயிற்றிலோ பெண்கள் ‘பூச்சரம்’… Read More »காதில் பூச்சுற்றல்

காணாக்கடி

சொல் பொருள் காணாக்கடி – இன்னதென்று தெரியாத நச்சுயிரி கடித்தல் சொல் பொருள் விளக்கம் கண்ணால் தெரியவராத ‘கடி’ ஏற்பட்டு விடுவதுண்டு. தேள், பாம்பு, நட்டுவாடீநுக்காலி, பூரான் இவற்றுள் இன்ன தெனத்தெரியாது எனின் அதனைக்… Read More »காணாக்கடி

காடாக்கல்

சொல் பொருள் காடாக்கல் – அழித்தல், கெடுத்தல் சொல் பொருள் விளக்கம் காடாக்குதல் கட்டாயம் வேண்டத் தக்கதே. மழையின் குறைவுக்குக் காட்டை அழித்ததே அடிப்படை. காலத்தில் மழையின்றி விளைவு இன்றி நாடு அல்லல்படுவது காடு… Read More »காடாக்கல்

காக்காக்கடி

சொல் பொருள் காக்காக்கடி – பற்படாமல் பண்டத்தின் மேல் துணிபோட்டுக் கடித்துத் தருதல் சொல் பொருள் விளக்கம் குழந்தைகள் எச்சிற் பண்டம் தின்னக் கூடாது என்பதற்காகக் காக்காக்கடி கடித்து ஒருவருக்கொருவர் தருவது வழக்கம். காக்கை… Read More »காக்காக்கடி

கறிவேப்பிலை

சொல் பொருள் கறிவேப்பிலை – பயன்கொண்டு தள்ளல் சொல் பொருள் விளக்கம் கறிவேப்பிலை தாளிதத்திற்குப் பயன்படும் இலை. ஊட்டச் சத்துடன் சுவையும் மணமும் உடையது. அதனைத் தாளித்துக் கொட்டினால் கறிக்கும் தனிச் சுவையுண்டாகின்றது. ஆயினும்… Read More »கறிவேப்பிலை