Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

பாடிப்பால்

சொல் பொருள் வெள்ளென வீழும் அருவி நீரைப் ‘பாடிப்பால்’ என்பது குற்றால வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் “கல் எனக் கரைந்து வீழும் கடும்புனல் குழவி” என்பது திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறும்… Read More »பாடிப்பால்

பாடி

சொல் பொருள் நீண்டதும் அகன்றதுமான தெரு சொல் பொருள் விளக்கம் ஆயர்பாடி என்பது பழமையான ஆட்சி. பாடி என்பது அகலமான தெரு என்னும் பொருளது. இரவில் தொழுவில் மாடுகளைக் கட்டினாலும் பகலில் வெளிப் புறத்தில்… Read More »பாடி

பாஞ்சிப் பழம்

சொல் பொருள் முந்திரிப் பழம் சொல் பொருள் விளக்கம் முன்னால் துருத்திக் கொண்டுள்ள பழம் முந்திரிப் பழம் ஆகும். அதனை “முன் துரு> முந்திரி” என்பர். முந்திரிப் பழத்தைப் பாஞ்சிப் பழம் என்பது குமரி… Read More »பாஞ்சிப் பழம்

பறவைக்கப்பல்

சொல் பொருள் வான ஊர்தி சொல் பொருள் விளக்கம் ஒரு காலத்தில் வானக் கப்பல் என வழங்கப்பட்டது, பின்னர் வான ஊர்தி ஆயது. வான ஊர்தி என்பது புறநானூற்றுச் சொல். இதனைச் செட்டிநாட்டு வட்டாரத்தினர்… Read More »பறவைக்கப்பல்

பற்றுக்காடு

சொல் பொருள் நீர் நிலை அடுத்துப் பற்றி இருக்கும் இடம் பற்று எனப்படும் சொல் பொருள் விளக்கம் நீரருகே சேர்ந்த நிலம் நன்செய் ஆகும். குளத்துப்பற்று, ஏரிப்பற்று, கால்வாய்ப் பற்று என நீர் நிலை… Read More »பற்றுக்காடு

பள்ளை

சொல் பொருள் விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு சொல் பொருள் விளக்கம் விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு என வழங்கப்படும். அது அதன் உட்குழிவு நோக்கிப் பள்ளை என வழங்கப்படுதல் வில்லுக்குழி வட்டார வழக்காகும். அது விலாப்புறம்… Read More »பள்ளை

பள்ளயம்

1. சொல் பொருள் வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் துணியை விரித்து அகலமாகப் படையல் செய்வதைப் பள்ளயம் என்பது பேராவூரணி வட்டார வழக்காகும் 2. சொல் பொருள் விளக்கம் வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் துணியை விரித்து… Read More »பள்ளயம்

பள்ளக்கல்

சொல் பொருள் பள்ளக்கல் என இடிக்கப் பயன்படுத்தும் உரலைக் குறிப்பிடுகின்றனர் சொல் பொருள் விளக்கம் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு தவசத்தை இடிக்கப் பள்ளமான கல்லைப் பயன்படுத்தினர். அப் பழைய வரலாற்றை விளக்குவது போல… Read More »பள்ளக்கல்

பலிசை

சொல் பொருள் வட்டி பலிசை என்பது இலேசு (ஊதியம்) என்னும் பொருளில் சிந்தாமணியில் வழங்குகின்றது. சொல் பொருள் விளக்கம் பலிசை என்பது வட்டி என்னும் பொருளில் நாகர் கோயில் வட்டார வழக்காக உள்ளது. கல்வெட்டுகளிலும்… Read More »பலிசை

பலகையடைப்பு

சொல் பொருள் பரண் சொல் பொருள் விளக்கம் வீட்டிலும் காட்டிலும் பொருள்கள் போட்டு வைக்கவும் காவல் கருதி அமர்ந்திருக்கவும் அமைக்கப்படுவது பரண் ஆகும். பரண் என்பதும் பரணை என்பதும் பொது வழக்கு. அதனைப் பலகை… Read More »பலகையடைப்பு