Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

மச்சி

சொல் பொருள் மச்சி என்னும் உறவுப்பெயர் பொதுவழக்கு ஒரு மாடு மலடாக இருந்தால் அதனை மச்சி என்பது விளவங்கோடு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஒரு மாடு மலடாக இருந்தால் அதனை மச்சி… Read More »மச்சி

மச்சம்

சொல் பொருள் அடையாளக்குறி விளைவு – விலை – தரம் – மதிப்பீடு குறித்துப் பார்ப்பது சொல் பொருள் விளக்கம் மச்சம் என்பது அடையாளக்குறி என்பது பொது வழக்கு. பருத்தி தவசம் வாங்கும் வணிகர்… Read More »மச்சம்

மங்கட்டை

சொல் பொருள் மங்கல வாழ்வு இழந்தவள் சொல் பொருள் விளக்கம் மங்கல மகள், மங்கல விழா, மங்கல மனை என்பவை திருமணம் நன்மை என்னும் பொருள்வழிச் சொற்கள். மன்+கலம்=மன்கலம் > மங்கலம். “மங்கலம் என்ப… Read More »மங்கட்டை

மகத்துப் பிள்ளை

சொல் பொருள் மிக எதிர்பாத்துக் கிடந்து பிறந்த பிள்ளை மகத்துப் பிள்ளை தலைப் பிள்ளை சொல் பொருள் விளக்கம் நெடு நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்து பின்னே மிக எதிர்பாத்துக் கிடந்து பிறந்த பிள்ளையை… Read More »மகத்துப் பிள்ளை

போரிடுதல்

சொல் பொருள் மகப்பேறு பார்த்தல் சொல் பொருள் விளக்கம் போரிடுதல் என்பது வெளிப்படைப் பொருள் தருவது. ஆனால் செட்டிநாட்டு வழக்கில் போரிடுதல் என்பது மகப்பேறு பார்த்தலைக் குறிப்பது அதன் அரும்பாடும் துயரும் விளக்கும் ஆட்சியாகும்.… Read More »போரிடுதல்

போத்தி

சொல் பொருள் தாத்தா போற்றி (போற்றத்தக்கவர்) சொல் பொருள் விளக்கம் போற்றி (போற்றத்தக்கவர்) என்னும் அருமைப் பெயர் போத்தி என மக்கள் வழக்கில் ஊன்றியுள்ளது. தாத்தா என்னும் முறைப்பெயரே போத்தி என்பதாம். இது நெல்லை… Read More »போத்தி

போடு

சொல் பொருள் பொந்து சொல் பொருள் விளக்கம் திட்டுவிளை வட்டாரத்தில் போடு என்பது பொந்து என்னும் பொருளில் வழங்குகின்றது. போட்டு வைக்கும் இடம், பெட்டி, பை ஆகியவை பொந்து (உட்குடைவு) உடையதாதலால் இப் பெயர்… Read More »போடு

போட்டி

சொல் பொருள் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் குழந்தைக்குப் பால் புகட்டுதல் போட்டுதல் எனப்படும் தருமபுரி வட்டாரத்தில் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது. ஊட்டும் கருவி ஊட்டியாயது… Read More »போட்டி

போஞ்சி

சொல் பொருள் எலுமிச்சைச் சாறு சொல் பொருள் விளக்கம் நாகர்கோயில் வட்டாரத்தில் போஞ்சி என்பது, எலுமிச்சைச் சாறு என்னும் பொருளில் வழங்குகின்றது. பிழிந்து எடுத்தது என்னும் பொருளில் பிழிஞ்சு – பேஞ்சி – போஞ்சி… Read More »போஞ்சி

போச்சை

சொல் பொருள் புகை சொல் பொருள் விளக்கம் புகுதலால் ஏற்பட்ட பெயர் புகை. நுண்துளைக் குள்ளும் புக வல்லது அது. புகுதல் = போதல்; போச்சை என்பது அகத்தீசுவர வட்டாரத்தில் புகை என்னும் பொருளில்… Read More »போச்சை