Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

களிவெருட்டு

சொல் பொருள் மஞ்சு வெருட்டு, சல்லிகட்டு என்பவை தருமபுரி வட்டராத்தில் களிவெருட்டு என்று வழங்கப்படுகிறது சொல் பொருள் விளக்கம் மஞ்சு வெருட்டு, சல்லிகட்டு என்பவை தருமபுரி வட்டராத்தில் களிவெருட்டு என்று வழங்கப்படுகிறது. மகிழ்வாக வெருட்டிப்… Read More »களிவெருட்டு

களிம்புப் பால்

சொல் பொருள் கட்டிபட்டுள்ள சீம்பால் ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் களிம்புப் பால் என வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கட்டிபட்டுள்ள சீம்பால் ஒட்டன்சத்திர வட்டார வழக்கில் களிம்புப் பால் என வழங்குகின்றது. தடவு களிம்புகள்… Read More »களிம்புப் பால்

களித்தல்

சொல் பொருள் கள்ளருந்தி மகிழ்தல் என்னும் பொருளுடைய இச்சொல், மகிழ்தல் என்னும் பொதுப் பொருளிலும் வரும் சொல் பொருள் விளக்கம் கள்ளருந்தி மகிழ்தல் என்னும் பொருளுடைய இச்சொல், மகிழ்தல் என்னும் பொதுப் பொருளிலும் வரும்.… Read More »களித்தல்

கழுதைக்கால் கட்டில்

சொல் பொருள் மடக்குக் கட்டிலின் கால் வளைந்து, ஒன்றோடு ஒன்று பின்னி இருப்பதால் ஒப்பு வகை கண்டு அதனைக் கழுதைக் கால் கட்டில் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம்… Read More »கழுதைக்கால் கட்டில்

கழுத்தேர்

சொல் பொருள் முன் ஏரை அடுத்துப் பின்னே செல்லும் ஏரைக் கழுத்தேர் என்பது நெல்லைப் பகுதி வழக்காகும். சொல் பொருள் விளக்கம் கழுத்து ஏர்; முன் ஏரை அடுத்துப் பின்னே செல்லும் ஏரைக் கழுத்தேர்… Read More »கழுத்தேர்

கழுத்திரு

சொல் பொருள் கழுத்திலே போடப்படும் திருமங்கல நாணைக் கழுத்திரு என்பது நாட்டுக் கோட்டை வட்டார வழக் காகும் சொல் பொருள் விளக்கம் கழுத்திலே போடப்படும் திருமங்கல நாணைக் கழுத்திரு என்பது நாட்டுக் கோட்டை வட்டார… Read More »கழுத்திரு

கவுளி

சொல் பொருள் கையால் பற்றிப் பிடிக்கும் அளவு கவுளியாம் சொல் பொருள் விளக்கம் கைப்பிடி அளவாம் வெற்றிலையைக் கவுளி என்பது வெற்றிலைக் கொடிக்கால் காரர் வழக்கம். கையால் பற்றிப் பிடிக்கும் அளவு கவுளியாம். குறிப்பு:… Read More »கவுளி

கவுல்

சொல் பொருள் இச்சொல் வஞ்சம் என்னும் பொருளில் தென்காசி வட்டாரத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் இச்சொல் வஞ்சம் என்னும் பொருளில் தென்காசி வட்டாரத்தில் வழங்குகின்றது. யானை தனக்குத் தீமை செய்தவரைப் பழிவாங்குவதற்குக் கன்னத்துள்… Read More »கவுல்

கவணி

சொல் பொருள் தோல் துண்டைக் கவணி என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு சொல் பொருள் விளக்கம் தோல் துண்டைக் கவணி என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு. கவணுக்குப் பயன்படும் துண்டுத் தோல், பின்னர் மற்றைத் துண்டையும் குறிப்பதாகலாம்.… Read More »கவணி

கவட்டை

சொல் பொருள் இது இரண்டு உருபா என்பதைக் குறிக்கும் சொல் பொருள் விளக்கம் மாட்டுத் தரகர் குழுமொழியாகக் கவட்டை என்பர். இது இரண்டு உருபா என்பதைக் குறிக்கும். கவைத்தலை = இரட்டைத்தலை. கவைமகன் என்பார்… Read More »கவட்டை