சொல் பொருள்
1 – (வி) 1. உரி, பேர்த்தெடு, 2. இடம்பெயர், 3. நீக்கு, 2. (பெ) உரிக்கப்பட்ட பட்டை அல்லது மேல்தோல்,
சொல் பொருள் விளக்கம்
உரி, பேர்த்தெடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strip off, tear off, tear off displace, remove, eradicate, Bark of a tree; the inner fibrous covering of a bamboo
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 236 மூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து, கிளையொடு நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4 தன் கூட்டத்துடன் தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி இடம்பெயர, காட்டினின்றும் வெளிவந்து உண்ணா பிணவின் உயக்கம் சொலிய நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/3,4 உண்ணாமையால் வருந்திய பெண்நாயின் வருத்தத்தைப் போக்குவதற்கு காலைப் பொழுதில் இரையினைக் கொண்டுவர எழுந்த நீர்நாய் பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் கழை படு சொலியின் இழை அணி வாரா ஒண் பூம் கலிங்கம் – புறம் 383/9-11 பாம்பின் தோல்போன்ற வடிவினை உடையவாய் மூங்கில் கோலின் உட்புறத்தே உள்ள தோல் போன்ற நெய்யப்பட்ட இழைகளின் வரிசை அறிய இயலாத ஒள்ளிய பூவால் செய்யப்பட்ட ஆடை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்