சொல் பொருள்
1. (வி.எ) ஞால் என்பதன் இறந்தகால வினை எச்சம், தொங்கி,
2. (பெ) நாள், அப்பொழுது,
சொல் பொருள் விளக்கம்
ஞால் என்பதன் இறந்தகால வினை எச்சம், தொங்கி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hanging, time, day, at the time of
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13 தொங்குவது போல் தோன்றிய ஞாயிறு மயங்கி மறைந்திட ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/9 பெற்ற நாளில் கொண்ட உவகையிலும் பேருவகை கொண்டாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்