சொல் பொருள்
(வி) 1. கருணையுடன் நோக்கு, 2. வரிசைசெய், சீர்செய், 2. (பெ) உயர்ந்த அன்பு,
சொல் பொருள் விளக்கம்
1. கருணையுடன் நோக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
view compassionately, gift, ideal love
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – புறம் 67/3 தன் நாட்டைக் கருணையுடன் நோக்கும் ஒள்ளிய முகத்தைப் போல இன்னா செயினும் இனிது தலையளிப்பினும் நின் வரைப்பினள் என் தோழி – குறு 397/6,7 இன்னாதவற்றைச் செய்தாலும், இனியவற்றை அளித்தாலும் உன் எல்லைக்குட்பட்டவளே என் தோழி! மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் – பரி 19/92,93 குறைவற்ற தம் காதலரின் அணைப்பினைப் பெறமாட்டார், தம்மை மணந்தாரின் புன்முறுவலுடன் கூடிய அன்பைப் பெறமாட்டார்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்