சொல் பொருள்
(வி) துளி, சொட்டு, 2. (பெ) 1. மழைத்துளி, 2. முதல் மழை, 3. மேகம்
சொல் பொருள் விளக்கம்
துளி, சொட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
drip, trickle, rain drop, first shower of rain in a season, cloud
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1 நுண்ணிதான மழைத்துளிகள் வீழ்ந்ததால் நறிய மலர்கள் உதிர்ந்து பரவி தன் பாடிய தளி உணவின் புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4 தன்னை(மேகத்தை)ப் பாடிய, மழைத்துளியையே உணவாகக்கொண்ட வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக தான் வந்தன்றே தளி தரு தண் கார் – குறு 65/3 தான் வந்தது முதல்மழையைத் தரும் குளிர்ந்த கார்ப்பருவம் தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு – கலி 50/16 மேகத்தினும் சிறந்தவனாக, உன்னை நாடி வந்த புலவர்க்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்