சொல் பொருள்
(பெ) 1. தந்தை வழிச் சொத்து,
2. உரிமைப்பொருள்,
சொல் பொருள் விளக்கம்
1. தந்தை வழிச் சொத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
patrimony, rightful possession
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரு கெழு தாயம் ஊழின் எய்தி – பட் 227 அச்சம் பொருந்தின தன் அரசவுரிமையை முறையாலே பெற்று தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ் புன்னை ஓங்கிய கானல் தண்ணம் துறைவன் சாயல் மார்பே – நற் 327/7-9 உரிமைப்பொருள் ஆகுதலும் உரியதேயாகும் – அரும்புகள் மலர்கின்ற புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்த கடற்கரைச் சோலையின் குளிர்ந்த அழகிய துறைகளைச் சேர்ந்தவனது மென்மையான மார்பு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்