சொல் பொருள்
1. (வி) செயலற்று நில்,
2. (பெ) திசை
சொல் பொருள் விளக்கம்
1. செயலற்று நில்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bewildered, direction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாய் வாளா நின்றாள் செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/46,47 வாய்பேச முடியாமல் நின்றாள், செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டுச் சித்தம் திகைத்து திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் – பரி 10/74 திசைகள் முழுதும் கமழ, முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்