சொல் பொருள்
திண்டாட்டம் –தம் துயரை உள்ளே இருப்பவர் கேட்டு உதவுமாறு ஆடிப்பாடுதல் திண்டாட்டமாகும்.
கொண்டாட்டம் –காவடிதோளில், தலையில், கைகளில், தூக்கிக் கொண்டு மகிழ்வாக ஆடுதல் கொண்டாடுதல் – கொண்டாட்டம் ஆகும்
சொல் பொருள் விளக்கம்
திண்டு– திண்ணை. சோற்றுக்கோ, வேறு பிச்சை (இரவல்) பெறுதற்கோ வறியவர், செல்வர் வீட்டு முகப்பில் உள்ள திண்டுகளில் ஏறி நின்று தம் துயரை உள்ளே இருப்பவர் கேட்டு உதவுமாறு ஆடிப்பாடுதல் திண்டாட்டமாகும். இது வறுமைப் பாட்டில் நிகழ்வது.
கோயிலுக்குக் காவடி கொண்டு செல்வதைக் காண்கிறோம். தோளில், தலையில், கைகளில், தூக்கிக் கொண்டு மகிழ்வாக ஆடுதல் கொண்டாடுதல் – கொண்டாட்டம் ஆகும். இஃது அன்பு மேலீட்டாலும், இறையுணர்வு மேம்பாட்டாலும், போர்க்கள வீறு முதலிய பெருமிதத்தாலும் உண்டாவதாம்.
ஊரவையில் ஒருவர்க்கு நேர்ந்ததையெல்லாம் கூறுதல் மன்றாட்டு ஆகும். கோயிலில் – இறை- மன்றாட்டும் உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்