சொல் பொருள்
திரட்டுதல் – பரவிக்கிடப்பதை ஒன்றாக்குதல் திரட்டுதல்.
உருட்டுதல் – திரட்டப்பட்டதை வேண்டும் அளவால் உருண்டையாக்குதல். இரண்டையும் செய்தல் திரட்டி உருட்டல் ஆகும்.
சொல் பொருள் விளக்கம்
மட்குடம் வனைவாரும், எருவாட்டி தட்டுவாரும், முதற்கண் மூலப்பொருள்களைத் திரட்டுவர். பின்னர் திரட்டியதை உருட்டிப் பயன்படுத்துவர்.
நூல்களைத் திரட்டுதல், பாடல்களைத் திரட்டுதல், ஊரைக் கூவித் திரட்டுதல் என்பன ஒன்று சேர்த்தலே.
மாவைக் களியாக்குவதற்குத் திரட்டி உருட்டுதல் இல்லாமல் முடியாது. திரட்டுதலோடு புரட்டி உருட்டுதலும் அதற்கு வேண்டும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்