Skip to content

சொல் பொருள்

(பெ) 1. திருக்கு, முறுக்கு, 2. மாறுதல், வேறாகுதல்

சொல் பொருள் விளக்கம்

1. திருக்கு, முறுக்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

twist, change, variation

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் – மலை 21

(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்,

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி – பரி 23/20

திறத்தால் சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *