சொல் பொருள்
(இ.சொ) 1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.
சொல் பொருள் விளக்கம்
1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
particle signifying a desire, time or a suggestion
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வார்ந்திலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெறுக தில் அம்ம யானே – குறு 14/2,3 நேராக வளர்ந்து ஒளிரும் கூரிய பற்களையுடைய, சில சொல் சொல்லும் பெண்ணைப் பெறுவேனாக நானே! பெற்றாங்கு அறிக தில் அம்ம இ ஊரே – குறு 14/3,4 பெற்ற பின்பு அறியட்டும் இந்த ஊரே! வருக தில் அம்ம எம் சேரி சேர- அகம் 276/7 வருவானாக, எம் சேரிக்கண் பொருந்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்