சொல் பொருள்
(வி) 1. வருத்து, 2. அசை, 2. (பெ) வருத்தம்
சொல் பொருள் விளக்கம்
1. வருத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cause pain, afflict, move, shake, pain, affliction
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட தண் இயல் எழிலி தலையாது மாறி – பதி 18/8-10 உலகத்து உயிர்கள் அழிய, பல ஆண்டுகள் வருத்தி, மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய், இமயமும் துளக்கும் பண்பினை – குறு 158/5 இமயமலையையும் அசைக்கின்ற தன்மையையுடையாய் நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/35-37 இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற பூணினைக் கொண்ட பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்