சொல் பொருள்
(வி) 1. அசை. அசைந்தாடு, 2. வருந்து, கலங்கு, 3. நிலைகலங்கு, 4. சோர்வடை,தளர்வடை
சொல் பொருள் விளக்கம்
1. அசை. அசைந்தாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
move, shake, sway from side to side, be perturbed, be uprooted, be wearied
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330 (தன்)கூட்டத்தைவிட்டுப் பிரிந்துபோன (வலம் இடமாக)அசைந்தாடும் திமிலைக்கொண்ட காளையும் துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463 (வேகும்போது கொதிப்பதால்) பக்கவாட்டில் குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு – பதி 31/13,14 வருந்துகின்ற குடிமக்களைச் சிறந்த நிலையில் நிலைநிறுத்தி, பகைவரின் முரசுகளைக் கைப்பற்றி, வெற்றி வீரர்களுக்குப் பரிசளித்து ஆண்கடனைச் செய்துமுடித்த உன் பூண் அணிந்த பரந்த மார்பு, மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை ஆம்பல் மெல் அடை கிழிய – அகம் 56/2-4 பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க இரும்பினால் செய்தது போன்ற கரிய கொம்பை உடைய எருமை ஆம்பலின் மெல்லிய இலைகள் கிழியுமாறு, தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது – புறம் 58/4 தனக்கு முன்னுள்ளோர் இறந்தாராக, தான் தளராது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்