சொல் பொருள்
(பெ) திரும்பத்திரும்ப அடித்து மோதுதல்,
சொல் பொருள் விளக்கம்
திரும்பத்திரும்ப அடித்து மோதுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hitting hard repeatedly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்ன கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 116 -119 வேல்களோடு நெருக்கமாக (வந்த வேற்படையாகிய)கூட்டம் தோற்றோடியதைப் போன்று, காற்று மிகவும் அடித்து மோதுகையினால், சாய்ந்து ஆரவாரமாக ஒலித்து, தலைவணங்கி, குட்டையாதலும் சூம்பிப்போதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு, ஆலைக்காக (அறைபடுவதற்காக)வாடியிருக்கும் இனிக்கும் கோலாகிய கரும்பு;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்