சொல் பொருள்
(வி) 1. தொங்கு, 2. ஊசலாடு, 3. பக்கவாட்டில் அசை, 4. நிலையாகத் தங்கு, 5. தூங்கல் ஓசையைக் கொண்டிரு, 6. தாமதி, 7. நடனமாடு, 8. மெதுவாக நட, 9. இடையறாது விழு,
சொல் பொருள் விளக்கம்
1. தொங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hang, be suspended, swing, sway from side to side, as an elephant, remain, abide, have the pattern of sound ‘thoongal’, delay, dance, walk slowly, pour, rain, fall unceasingly;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86 இண்டம்பூ, இலவம்பூ, தொங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை வீழ் ஊசல் தூங்க பெறின் – கலி 131/11 இடைவிடாமல் தேன் துளிர்க்கும் பெரிய மலர்களையுடைய குளிர்ந்த தாழையின் விழுதைக் கயிறாகத் திரித்துச் செய்த ஊஞ்சலில் நீ வந்து ஆடினால்; துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு பிடி புணர் வேழம் – பொரு 125,126 உடுக்கை போலும் அடிகளையும் அசைந்த நடைனையும் உடைய கன்றுகளுடன், பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும் சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 10 சுனை வற்றியதைப் போன்ற இருள் நிறைந்திருக்கும் உள்நாக்கில்லாத வாயினையும் தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின் – பதி 43/30 மனம் அடங்காமல் புகழ்ந்த, தூங்கல் ஓசையினைக் கொண்ட பாட்டிற்கேற்ப முழங்கும் முழவினையுடைய பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை பெரு நீர் போகும் இரியல் மாக்கள் ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 431-433 பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின் பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள் ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல கனை குரல் கடும் துடி பாணி தூங்கி உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/9,10 மிக்கா குரலையுடைய விரைவான உடுக்கின் ஒலிக்கு ஒத்த தாளத்தோடு ஆடி தழையுடன் கூடிய கண்ணியைச் சூடியவராய் ஊனைப் புழுக்கி உண்ணும் கொன்றை அம் குழலர் பின்றை தூங்க மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/11,12 கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர, வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில் கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெய தூங்கிய சிதரினும் பலவே – புறம் 277/4-6 கண்கள் சொரிந்த நீர் வலிய கழையாகிய மூங்கிலிடத்து அசையும் மூங்கில் புதரின்கண் மழை பெய்த வழித் தங்கி விழும் நீர்த்துளியினும் பலவாகும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்