சொல் பொருள்
தூசி – கிழிந்து நைந்து போன துண்டும் துணியும்.
துப்பட்டை(துய்ப்பட்டை) – அழுக்கேறிக் கழிந்து போன பஞ்சு.
சொல் பொருள் விளக்கம்
தூசு என்பது துணி என்னும் பொருளது. தூசு நல்குதல் பண்டு தொட்டே வரும் வழக்கம். தூசி, தும்பு காண்க. துய் என்பது பஞ்சு. துய்ப்பட்டை என்பது பஞ்சுக்கற்றை அல்லது பஞ்சுத் தொகுதி என்பதாம்.
இப்பொழுது தூசி துப்பட்டை என்பது முதற்பொருளில் இருந்து பெரிதும் விலகிக் குப்பை கூளப் பொருளில் வழங்குகின்றதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்