தூவல் என்பது மழைப் பொழிவு
1. சொல் பொருள்
மழைப் பொழிவு
எழுதுகோல்
உணவு(கறிவகை) என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது.
(பெ) 1. தூவுதல்,2. தூறல் மழை,3. துவலை, நீர்த்துளி, 4. இறகு(எழுதுமிறகு)
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
sprinkling
little drops of water
Feather
Pen
3. சொல் பொருள் விளக்கம்
மழைப் பொழிவு. இது, தொன்மையான இலக்கிய வழக்கு. எழுதுகோல். இது புதுவழக்கு; பாவாணர் கொடை. உணவு என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டாரத்தில் வழங்குகின்றது. தூவல் பயிர்க்கும் (உயிர்க்கும்) உணவாவதுடன், உணவு ஆக்கித் தருதல், “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” என்னும் குறளால் விளக்கமுறும். அவ் விளக்கம் பொது மக்கள் வெளிப்பாடு, இதற்கு உணவுப் பொருள் கண்டதாம்.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65
‘கல்’லென்கிற ஓசையுடன் தூறலின் (நீர்த்திவலைகளைத்)தூவுகையினால், ஒருவருமே
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்ப்
குடிஞை இரட்டு நெடுமலை அடுக்கத்துக்
கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிக்
கரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி
முரஞ்சுகொண் டிறைஞ்சின அலங்குசினைப் பலவே
தீயி னன்ன ஒண்செங் காந்தள்
தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து
அறியா தெடுத்த புன்புறச் சேவல்
ஊஉ னன்மையி னுண்ணா துகுத்தென
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய்
வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும் –மலை 520
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி – மலை 514
தூறலால் செழுப்புற்றுத் தழைத்து உயர்ந்த, அரும்புகள் முதிருகின்ற (மணம்வீசும்)நறைக் கொடியும்,
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின் – நற் 354/7
காற்றால் அசையும் தோணியையுடைய நீர்த்துவலைகள் தெறித்துவிழும் கடற்கரையில்
தண் குரவைச் சீர்தூங் குந்து;
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து;
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் – புறநானூறு – 24.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்